செப்டம்பர் மாத தொடக்கத்தில் டிங்கி நோயாளர்கள் எண்ணிக்கை 19% அதிகரிப்பு – சுகாதார அமைச்சு

பெட்டாலிங் ஜெயா:

கஸ்ட் மாதத்தின் பிற்பகுதியுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாத தொடக்கத்தில் டிங்கி காய்ச்சல் நோயாளிகள் கிட்டத்தட்ட 19 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 9 வரை 2,284 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹமட் ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.

இது ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 2 வரை பதிவான 1,924 டிங்கி நோயாளிகளுடன் ஒப்பிடுகையில் தற்போது 360 சம்பவங்கள் அல்லது 18.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here