குளுவாங்:
தாமான் டெலிமாவில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட குற்றத்திற்காக 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) அதிகாலை 1 மணியளவில் அங்குள்ள ஒரு கடையின் முன் நடந்ததாக குளுவாங் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் பஹ்ரின் முகமட் நோ தெரிவித்தார்.
“குறித்த நபரின் அநாகரீகமான செயலின் வீடியோ சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டதை அடுத்து, சந்தேக நபர் கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 20) மதியம் 1.30 மணியளவில் தாமான் இந்தானில் கைது செய்யப்பட்டார்,” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இவ்வழக்கு அநாகரீகமான நடத்தைக்காக குற்றவியல் சட்டத்தின் 377D பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.