மக்களவையில் நான் வேப் புகைத்தேனா? புகைப்படக் கலைஞர் மீது தானா மேரா MP போலீஸ் புகார்

மக்ககளவையில் செவ்வாயன்று  வேப் புகைத்ததாக குற்றம் சாட்டிய புகைப்படக் கலைஞருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தானா மேரா நாடாளுமன்ற உறுப்பினர்  இக்மல் ஹிஷாம் அப்துல் அஜீஸ் பரிசீலித்து வருகிறார். இன்று பிற்பகலில் டாங் வாங்கி போலீஸ் மாவட்ட தலைமையகத்தில் தனது அதிகாரி அறிக்கை தாக்கல் செய்வார் என்று இக்மல் கூறினார்.

காவல்துறை அறிக்கை பதிவு செய்யப்பட்டவுடன் ஒரு ஊடக அறிக்கையும் வெளியிடப்படும் என்று சினார் ஹரியான் அவரை மேற்கோள் காட்டியது. செவ்வாயன்று, இக்மால் பேனா போன்ற பொருளை வாயில் வைத்திருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. இது பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தனிப்பட்ட புகைப்படக் கலைஞரால் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இருப்பினும், பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் தான் வேப் புகைக்கவில்லை என்று மறுத்ததோடு தன் வாயில் பேனா இருந்ததையும் தெளிவுபடுத்தியுள்ளார். நான் புகைப்பிடிப்பவன் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையில், மக்களவை சபாநாயகர் ஜோஹாரி அப்துல், இந்த சம்பவம் குறித்து விரிவான விளக்கம் பெற இக்மாலுக்கு கடிதம் அனுப்புவதாக கூறினார்.

2020 ஆம் ஆண்டில், அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன், மக்களவையிக் இ-சிகரெட் புகைத்ததற்காக சுகாதார அமைச்சகத்தால் சம்மன் அனுப்பப்பட்டது. தன் செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here