பாஹாவில் உள்ள ஒரு பள்ளியின் 100 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு; உணவு விஷமாகியதால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம்

சிரம்பான்:

பாஹாவ், ஜெம்போலில் உள்ள பள்ளியைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் கடந்த வாரம் முதல் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்ட உணவு நச்சாவதுடன் தொடர்புடைய அறிகுறிகளை அனுபவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் முடிவுக்காக காத்திருப்பதாக, நெகிரி செம்பிலான் கல்வித் துறை இயக்குநர் டாக்டர் ரோஸ்லான் ஹுசின் தெரிவித்தார்.

“ஆனாலும் 100 பிள்ளைகளை உள்ளடக்கிய இந்த அறிகுறிகள் ஒரே நேரத்தில் நிகழவில்லை” என்று கூறிய அவர், இது செவ்வாய் முதல் வெள்ளி வரை நடந்தது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகிலுள்ள கிளினிக்குகளில் சிகிச்சை பெற்று, இப்போது அவரவர் வீடுகளில் உள்ளனர் என்றார்.

“இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, இது உணவு விஷமா அல்லது வேறு காரணமா என மாவட்ட சுகாதார அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது, அவர்களின் முடிவுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஆரம்பப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த உடல்நலக்குறைவு சம்பவம் குறித்து வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here