RM1 மில்லியனுக்கும் அதிகமான ஊழல் மோசடி; ஜோகூர் முன்னாள் மேயர் கைது

ஜோகூர் பாரு:

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் மேயர் ஒருவர் நேற்று பிற்பகல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.

63 வயதான சந்தேக நபர் மாநிலத்தில் உள்ள ஒரு உள்ளூர் கவுன்சிலின் முன்னாள் மேயர் ஆவார், மேலும் அவர் ஜோகூரில் உள்ள குளுவாங்கில் உள்ள அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று MACC தெரிவித்துள்ளது.

“சந்தேக நபர் 2020 முதல் 2021 வரை மேயராக பதவி வகித்த காலத்தில், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக ஒப்பந்ததாரர்களிடமிருந்து 1 மில்லியன் ரிங்கிட்க்கும் அதிகமான லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் “சந்தேக நபருக்கு எதிராக 12 குற்றச்சாட்டுகளுடன் இன்று காலை ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் 1 (ஊழல் சிறப்பு) ஆஜர்படுத்தப்படுவார்,” என்று நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அது தெரிவித்தது.

இதற்கிடையில், ஜோகூர் MACC இயக்குனர் டத்தோ அஸ்மி அலியாஸை தொடர்பு கொண்டபோது, அவர் இந்தக் கைது நடவடிக்கையை உறுதிச்செய்தார்.

இந்த வழக்கு MACC சட்டம் 2009ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here