பியூஃபோர்ட்:
இன்று காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 224 பேர் இன்னமும் தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் நீர்மட்டம் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஏழு பேர் அடங்கிய மூன்று குடும்பங்கள் நேற்று மாலை வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, மாவட்ட இயற்கைப் பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இயற்கை பேரழிவு காரணமாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகள் எதுவும் இதுவரை மூடப்படவில்லை என்று சபா மாநில கல்வித் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.