45 லட்சம் மலேசியர்கள் வேலை இழக்கும் அபாயம்

கோலாலம்பூர்:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI), இயந்திரமய கற்றல் ஆகியவற்றால் 2030ஆம் ஆண்டுவாக்கில் மலேசியாவில் உள்ள 45 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிக மான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் மனிதவள அமைச்சு வெளியிட்ட தரவுகள் இதனைக் காட்டி இருக் கின்றன. AI தொழில்நுட்பத்தின் விரிவாக்கம் அடிப்படை வேலைத்துறைக ளுக்கும் அதற்கு ஆதரவான வேலைகளுக்கும் மிகப்பெரிய அச்சறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அந்தத் தரவுகள் கூறியிருக்கின்றன. ஏஐ தொழில்நுட்பம் துரிதமான வளர்ச்சியைக் கண்டுவரும் காரணத்தினால் அடுத்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 83 மில்லியன் வேலைகள் இல்லாமல் போய்விடும் சாத்தியம் உள்ளது. அதே சமயம் தொழில்நுட்ப நிபுணத்துவ அடிப்படையிலும் கனரக இயந்திரங்களை இயக்குவதன் அடிப்படையிலும் 69 வகையான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைகள் இருக்காது, தற்போது மனிதர்கள் செய்யக்கூடிய வேலைகள் ஏஐ தொழில் நுட்பத்தால் காணாமல் போய்விடும் சாத்தியமும் உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் ஆற்றல் மனிதர்களுக்குப் பதிலாக அந்த வேலைகளை எயந்திரம் மூலம் செய்யக்கூடிய நிலை வந்துவிடும்.

அதுமட்டுமன்றி ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களைவிட இன்னும் சிறப்பாக அந்தப் பணி களைச் செய்துவிடும் எனக் கூறப்படுகிறது. சம்பளம் போன்ற செலவினங்கள் இல்லா மல் AI  தொழில்நுட்பம் இப்போது மனிதர்கள் செய்யக்கூடிய வேலைகளைச் செய்து முடித்துவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள் செய்யக்கூடிய வேலை கள் எந்திரமயமாகப் போகின்றன. அந்த வேலைகளுள் வங்கிக் குமாஸ்தா வேலை, கணக்காளர் வேலை, டிக்கெட் விற்பனையாளர் வேலை, வரவேற்பு அதிகாரிகள், வாடிக்கையாளர் ஙே்வை அதிகாரிகள், பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்கள், தரவுக ளின் ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளிட்ட பல வேலைகள் இல்லாமல் போய்விடும்.

இந்த வேலைகளை AI தொழில்நுட்பம் மூலம் எந்திரங்கள் செ ய்துவிடும் நிலை வரப் போகிறது. குமாஸ்தா அடிப்படையிலான வேலைகள்தாம் மிகமோங்மாகப் பாதிக்கப் படப் போகிறது என்று 2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதார கலந்துரையாடல் அறிக்கை கூறியிருக்கின்றது.

அடுத்த 5 ஆண்டுகளில் சில துறைகளில் இருக்கக்கூடிய வேலைகள் காணாமல் போகப் போகின்றன. இதனை உலகப் பொருளாதார கலந்துரையாடல் அறிக்கை மிகத் தெளிவாகத் தரவுகளுடன் சுட்டிக்காட்டி இருக்கின்றது என்று உத்தாரா மலே சியா பல்கலைக்கழகத்தின் பல்லூடக, தொலைத்தொடர்பு ஆய்வாளரான இணைப் பேராசிரியர் டாக்டர் முகமட் கைரி அகமட் குறிப்பிட்டுள்ளார்.

குமாஸ்தா அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் தற்போதுகூட மிக மோசமாக ச ரிவு கண்டிருக்கின்றன. வாடிக்கையாளர் சே வை வேலை வாய்ப்பும் அவற்றுள் அடங்கும். தற்போது இந்த வேலை வாய்ப்புகளில் 50 விழுக்காட்டிற்கும் மேல் இல்லாமல் போய் விட்டன. மனிதர்கள் செய்துவந்த இந்த வேலையை இப்போது AI தொழில்நுட்பத்தைக் கொண்ட எந்திரங்கள் செய்கின்ற நிலைவந்துவிட்டது. ஆகவே இந்தத் தொழில் களுக்கான வேலை வாய்ப்புகள் 50 விழுக்காட்டிற்கும் மேல் சரிவுகண்டு விட்டன.

   இத்துறையில் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகளும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகின்றன. அந்த அடிப்படையில் வரக்கூடிய 5 ஆண்டுகளில் இத்துறை யில் மனிதர்களுக்கான வேலை வாய்ப்பு அறவே இல்லாமல் போய்விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

புதிய வேலை வாய்ப்புகள் தரவுகள் ஆய்வு, விவரங்களை ஆய்வுசெ ய்யும் நிபுணத்து வம், வர்த்தகத் தரவுகளை ஆய்வுசெய்தல், தரவுகள் பொறியியலாளர் உள்ளிட்ட இதர சில துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் சொன்னார்.

ஆகவே இதனைக் கருத்தில்கொண்டு உயர்கல்விக்கழகங்கள் இத்துறையில் ஆற்றல் பெற்ற பட்டதாரிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார். இனி வெறும் பயிற்சிகளை மட்டுமே சார்ந்திருக்கவும் இயலாது என்று அவர் சு ட்டிக்காட்டி இருக்கின்றார்.

அமெரிக்காவிலும் பாதிப்பு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 300 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர் என்று இவ்வாண்டு அனைத்துலக நிறுவனங்கள் சில வெளியிட்ட அறிக்கை கூறியிருப்ப தாகப் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமட் யூசோப் சாரி குறிப்பிட்டிருக்கின்றார்.AI தொழில்நுட்பத்தால் தொழிலாளர்கள் இடையே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வுள்ளது. ஆனால் அதேங்மயம் ஏஐ தொழில்மூலம் உருவாகும் வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைத்துவிடும்.

வேலை வாய்ப்பு சந்தையில் ஏஐ காரணமாக ஏற்படும் தாக்கத்தைப் பட்டதாரிகளும் எதிர்நோக்கத்தான் வேண்டும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இதற்கு பட்ட தாரிகள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். இப்போது இருக்கக்கூடிய ஆற்றலை அவர்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆள்பலச் சந்தையில் உரிய வாய்ப்புகளைப் பெற வேண்டுமானால் நடப்பு தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் பொருத்தமான பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள பட்ட தாரிகள் தயாராக வேண்டும் என்பது அவசியம் உருவாகும். இந்த வேலை வாய்ப் புகள் 30 முதல் 35 விழுக்காடு வரை அதிகரிக்கும். இத்துறைகளில் 14 லட்சத்திற்கும் அதிகமான புதியவேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் விவசாய சாதனங்களை அல்லது எந்திரங்களை இயக்கக்கூடிய துறை யில் வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இத்துறையில் 25 லட்சத்திற்கும் அதி கமான வேலை வாய்ப்புகள் தோன்றியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here