பகடிவதை செய்வதை நிறுத்துங்கள், அறிவார்ந்த மாணவர்களாக உருவாகுங்கள்-கல்வி அமைச்சர்

புக்கிட் மெர்தாஜம்:

ள்ளிகளில், உயர்கல்வி மையங்களில் பகடிவதை செய்வதை மாணவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு மாறாக, அறிவார்ந்த மாணவர்களாக உருவாகுங்கள் என்று கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் மாணவர் சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டார்.

இங்கு புக்கிட் மெர்தாஜம் துன் ஷேக் சே சஹாபுடின் அறிவியல் இடைநிலைப் பள் ளிக்கு 1 லட்சம் ரிங்கிட் மானியத்தை அறிவித்த பின், பகடிவதையால் விளையக் கூடிய தீமைகளை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார். பகடிவதை, பாலியல் தொல்லை போன்ற தீய பழக்கங்களிலிருந்து விடுபட்டு வீட்டிற்கும் பள்ளிக்கும்  நன்மை அளிக்கும் வகையில்  அறிவார்ந்த சமுதாயமாக உருவாகவேண்டும் என்று  அவர் வலியுறுத்தினார்.

பகடிவதை, பாலியல் தொல்லை போன்றவை ஒரு மாணவனுக்கு சிறந்த எதிர்காலத் தைக் கொண்டு வராது.  அவனது வாழ்க்கை பாழ்பட்டுப் போகும். இதனால், அவனுக்கு மட்டுமன்றி அவன் சார்ந்த குடும்பத்திற்கும்  நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்  மிகப் பெரிய இழப்பாக இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதுபோன்ற ஆரோக்கியமற்ற  விவகாரங்களில் ஈடுபடாமல் இருக்க  கற்றல் கற் பித்தலில்  மாணவர்களை ஈர்க்கும் செய்திகளை அதிகமாகப் போதிக்க வேண்டும். கல்வி அமைச்சின் யூடியூப், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றில் வெளியிடப்படும் தகவல்களையும் பாடங்களையும் அதிகமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஆசிரியர் சமுதாயத்தை பட்லினா சிடேக் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here