டேவான் பஹாசா மற்றும் புஸ்தாக்கா சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது அவசியமாகும்

கோலாலம்பூர்:

ந்நாட்டில் தேசிய மொழி தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு எதிராக டேவான் பஹாசா டான் புஸ்தாக்காவிற்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் 1959ஆம் ஆண்டு டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக்கொண்டார்.தாம் இந்நாட்டின் பிர தமராக இருந்தபோது இச்சட்டத்தில் திருத் தம் கொண்டு வருவதற்குப் பல்வேறு முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அர சாங்கம் மாறியதைத் தொடர்ந்து அதனை அமல்படுத்த முடியவில்லை என அவர் சொன்னார்.

நாட்டு நடப்புக்கு ஏற்ப தேசிய மொழி வாக் கியங்களைச் சரியான முறையில் பயன் படுத்துவதை உறுதிப்படுத்த டேவான் பஹாசா டான் புஸ்தாக்காவிற்கு அளப் பரிய பங்குண்டு எனக் கூறிய அவர், அம் மொழியைத் தவறாகப் பயன்படுத்தி வரும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப் பதற்கு போதுமான அதிகாரம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே நாட்டில் தேசிய மொழி சீரான, சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த நடப்பு அரசாங்கம் மேற்குறிப்பிட்ட விவகாரத்தில் அதிக அக்கறை கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.நேற்று தலைநகரிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தேசியமொழி மீதான அனைத்துலக ஆய்வரங்கு ஒன்றைத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 22.5.2022ஆம் தேதி டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா மண்டபத்தில் நடத்தப் பட்ட தேசியமொழி விரிவாக்கம் மீதான ஆய்வரங்கைத் தொடர்ந்து இந்த அனைத் துலக தேசியமொழி ஆய்வரங்கம் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

தேசிய மொழியை அனைத்துலக அளவில் மேலும் விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்து வதற்கும் தாம் மேற்கொண்ட முயற்சியே இதுவாகும் என அவர் தெரிவித்தார். இந்த ஆய்வரங்கில் மலேசியா உட்பட ஆசியான் நாடுகளில் இருந்தும் அனைத்துலக அள வில் இருந்தும் பல முக்கிய தேசிய மொழி ஆர்வலர்கள் கலந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே அண்மையில் தாம் இந்தோனேசியாவுக்கு வருகை மேற்கொண்டபோது ஆசியான் நாடுகளுக்கு 2ஆவது அதிகாரத்துவ மொழியாக தேசிய மொழியைக் கொண்டு வருவதற்குத் தாம் விருப்பம் கொண்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமது இந்த முயற்சிக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ முழு ஆதரவு கொடுத்தார். காரணம் தென் கிழக்காசிய நாடுகளில் 30 கோடிக்கும் மேற்பட்டோர் தேசிய மொழியைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here