என் முகம் கொண்ட… என் உயிர் கொண்ட… குழந்தைகளின் பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என கடந்த அக்டோபர் 9-ந்தேதி விக்னேஷ் சிவன் டுவிட்டர் பதிவில் வெளியிட்டார்.

குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டு உள்ளோம் என விக்னேஷ் சிவன் முன்பே கூறினார். இதன்பின்னர், ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என தன் இரண்டு மகன்களின் பெயர்களையும் வெளியிட்டார். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றெடுத்த நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு, குழந்தைகளை வளர்ப்பதிலும் அதிக அக்கறை எடுக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக வீட்டுக்கு திரும்பி குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது, உடைகள் மாற்றுவது என்று அவர்களை பராமரிப்பதில் நேரம் செலவிட்டு வருகிறார். இந்நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தங்களுடைய இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்த நாளை இன்று கொண்டாடினார்கள்.

இதுபற்றி விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், என் முகம் கொண்ட… என் உயிர், என் குணம் கொண்ட… என் உலக் (இந்த வரிகளை பதிவு செய்ய மற்றும் நம்முடைய புகைப்படங்களை ஒன்றாக வெளியிட நீண்டகாலம் காத்திருந்தேன் எனதருமை குழந்தைகளே) என தெரிவித்து, என்னுடைய மகன்கள் உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தெய்வீக் ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.

உங்கள் இருவரையும் வார்த்தைகளால் விவரிக்கும் விசயங்களை கடந்து, வாழ்க்கையில் எல்லாவற்றையும் மற்றும் ஒவ்வொரு விசயமும் கடந்து, அப்பாவும், அம்மாவும் அன்பு செலுத்துகிறோம். எங்களுடைய வாழ்வில் வந்ததற்காகவும், மிக மகிழ்ச்சியாக ஆக்கியதற்காகவும் உங்கள் இருவருக்கும் நன்றி. நீங்கள், அனைத்து நேர்மறையான மற்றும் வாழ்த்துகளை கொண்டு வந்துள்ளீர்கள்.

இந்த ஓராண்டு முழுவதும், வாழ்நாள் முழுமைக்கான மகிழ்ச்சிக்கான தருணங்களை நிறைத்திருந்தது. உங்கள் இருவரின் மீதும் அன்பு செலுத்துகிறோம். நீங்கள் எங்களுடைய உலகம் மற்றும் எங்களுடைய ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்று பதிவிட்டு உள்ளார். இதுபற்றி வெளியிடப்பட்ட புகைப்படத்தில், இரட்டை குழந்தைகள் இருவரும் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளில் காணப்படுகின்றனர்.

இந்த பதிவை வெளியிட்டதும், ரசிகர்கள் பலரும் விமர்சன பகுதியில் பிறந்த நாள் வாழ்த்துக்கான செய்திகளை குவித்து வருகின்றனர். தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர். நயன்தாரா சமீபத்தில் இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த ‘ஜவான்’ படம் திரையில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஜெயம் ரவி ஜோடியாக ‘இறைவன்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இவை தவிர மேலும் 2 படங்களும் கைவசம் வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here