இன்றைய நவீன உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் நமக்கு பல்வேறு விதமான ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இதற்கு முன்னர் மிகவும் கஷ்டப்பட்டு செய்து வந்த பல்வேறு வேலைகளை தொழில் நுட்பங்களின் உதவியுடன் மிகவும் எளிதாகவும் உட்கார்ந்து இடத்திலிருந்தே நம்மால் செய்ய முடிகிறது.
ஒரு வகையில் தனிப்பட்ட நபர்களுக்கு இவை மிகவும் சௌகரியமான ஒன்றாக இருந்தாலும் கூட உடல் ஆரோக்கியம் என்று வரும்போது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே இருப்பதோ அல்லது உடல் இயக்கம் பெருமளவில் இல்லாமல் இருப்பதும் பல்வேறு வித பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக இன்றைய காலத்தில் அலுவலக வேலைகளில் ஈடுபட்டுள்ளோர் பலரும், உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்களும், நீண்ட தூர பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் பெருமளவில் உடல் இயக்கத்திற்கான தேவைகள் ஏற்படுவதில்லை. கேட்பதற்கு மிகவும் சாதரணமான ஒன்றாக தோண்டினாலும் இவை சிறிது சிறிதாக நம்முடைய இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்: நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டோ அல்லது உடல் இயக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீண்ட காலத்திற்கு நாம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்க்கும் போது நமது தசைகள் மிகவும் குறைவான கொழுப்பை எரிக்கின்றன.
இதனால் நமது உடலில் அதிகப்படியான உடலுக்கு கெடுதல் செய்யும் கொலஸ்ட்ரால் சேர்ந்து இரத்த நாளங்களை அடைத்துக் கொள்ளும். இவை நீண்ட காலத்திற்கு தொடரும் பட்சத்தில் ரத்த நாளங்கள் மிகவும் சுருங்கி ரத்த ஓட்டம் ஏற்படுவதை தடை செய்து மாரடைப்பு போன்ற இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளனர்.
உடல் பருமன்: மிகவும் குறைவான உடல் இயக்கத்தை மேற்கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. உடல் இயக்கம் குறைவாக இருப்பவர்களுக்கு சாதாரணமாகவே உடல் எடை அதிகரித்துக் கொண்டே செல்லும். இருக்க வேண்டிய அளவிற்கு மேல் உடல் எடை அதிகரிக்கும் போது அவை கண்டிப்பாக இதயத்தில் கோளாறுகளை உண்டாக்கும்.
அதிலும் குறிப்பாக அடிவயிற்றை சுற்றி ஏற்படும் கொழுப்பானது மிகவும் ஆபத்தானது. இது இன்சுலின் தடையை ஏற்படுத்தி டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் பல்வேறு வித இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும். இவை நாளடைவில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம்.




















