கம்போங் சுங்கை கொரோக்கில் தீப்பரவல்; 15 கடைகள் தீயில் எரிந்து நாசமாயின

ஜித்ரா:

ன்று அதிகாலை 1.20 மணியளவில், கம்போங் சுங்கை கொரோக்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 கடைகள் எரிந்து நாசமாயின.

தனது சகோதரர் முகமது அஸ்லாம் (22) நடத்தி வந்த மளிகைக் கடை இன்று அதிகாலை தீயில் எரிந்து நாசமானது என்று முகமட் அக்ரம் முகமட் ஜோஹாரி, 31 கூறினார்.

“தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும், என்ன நடந்தது என்பதைப் பார்க்க விரைந்தார், ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் அழிந்துவிட்டன,” என்றும், தனது மளிகைக் கடையைக் காப்பாற்ற முடியவில்லை என்பதைக் கண்டு தான் மனவருத்தமடைந்ததாகவும் அவர் கூறினார்.

“கடந்த இரண்டு வருடங்களாக இயங்கி வந்த மளிகைக் கடை அழிந்து போனது மிகவும் வருத்தமாக இருக்கிறது, ஏனென்றால் கடையில் நிறைய பொருட்கள் இருந்தன, அனைத்தும் எரிந்துவிட்டன, ஆனால் மொத்த நஷ்டம் எவ்வளவு என்று எனக்கு தெரியவில்லை” என அவர் சொன்னார்.

மேலும் தனது மளிகைக் கடை தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை இயங்கும் என்றும், ஆனால் சம்பவத்தின் போது யாரும் அங்கு இல்லை என்றும் முகமட் அக்ரம் கூறினார்.

இதற்கிடையில், ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முகமட் புஸ்டன் கருடின் கூறுகையில், தீ விபத்தில் உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றார்.

முன்னதாக, நள்ளிரவு 1.25 மணியளவில் அவரது துறைக்கு இந்த சம்பவம் தொடர்பாக அழைப்பு வந்ததாகவும், உடனே உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட தீயணைப்புக்குழு அந்த இடத்திற்கு சென்றதாகவும் கூறினார்.

மேலும் அதிகாலை 3.20 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் மொத்த இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here