கார்டினியா ரொட்டிகளின் விலை ஏற்றம்; விளக்கம் கோரி அமைச்சு நோட்டீஸ்!

கோலாலம்பூர்:

ரொட்டி விலை அதிகரிக்கப் படவுள்ளது தொடர்பில் Gardenia Bakeries (KL) Sdn. Bhd. (Gardenia KL) நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, உள்நாட்டு வாணிபம், வாழ்வாதாரச் செலவினத் துறை அமைச்சு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக துணையமைச்சர் ஃபுஸியா சாலே தெரிவித்தார்.

அந்நிறுவனத்தின் 30 தயாரிப்புப் பொருட்களின் விலை அடுத்த மாதம் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டது தொடர்பில் இந்த நோட்டீஸ் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதில் அளிக்க அந்நிறுவனத் தரப்பினருக்கு 6 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளை ரொட்டியின் விலை உயர்த்தப்படாது என அவர்கள் அறிவித்துள்ளனர். எனவே அத்தரப்பினரின் முழுமையான பதிலுக்குக் காத்திருப்போம் என நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட துணை அமைச்சர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அமைச்சு விளக்கம் கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளதை அடுத்து Gardenia KL நிறுவனம் தங்கள் தயாரிப்பு களின் விலைகளை உயர்த்த முடியாதா என எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த ஃபுஸியா சாலே, இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது போல் அந்நிறுவனம் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்துவதைத் தடுக்க முடியாது.

ஆனாலும் விலையேற்றத்திற்கான காரணம் குறித்து அவர்கள் தரப்பிடம் இருந்து முழு விளக்கமும் விவரமும் பெறலாம் என்றார் அவர். முன்னதாகத் தங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புப் பொருட்கள் சிலவற்றின் விலையை உயர்த்துவதாக Gardenia KL நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த விலை மாற்றம் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து அமல்படுத் தப்படும் என்று அந்நிறுவனம் தெளிவுபடுத்தி இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here