Duitnow QR சேவை கட்டணம் – மூன்று பெரிய வங்கிகள் விலக்களிக்கின்றன

கோலாலம்பூர் :

Duitnow QR குறீயீட்டைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் விற்பனையாளர்களுக்கு May bank, Public Bank, CIMB Bank ஆகிய மூன்று வங்கிகள் கட்டண விலக்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.

இந்த ஆண்டு இறுதி வரை கட்டண விலக்கை (MDR) ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக CIMB Bank அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் Duitnow QR குறியீட்டைப் பயன்படுத்தும் விற்பனையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும் எண்ணம் தற்போது இல்லை என்று May bank வங்கி தெரிவித்துள்ளது. மேலும், புதிய அறிவிப்பு வெளியிடப்படும் வரை, அச்சேவைக்குக் கட்டணமில்லை என்று May bank வங்கி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 1 முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை QR கட்டணத்திற்குத் தள்ளுபடி வழங்குவதாக Public Bank தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நவம்பர் 1 முதல் DuitNow QR குறியீடு இயங்குதளம் மூலம் பெறப்படும் கட்டணங்களுக்கு விற்பனையாளர்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை நேற்று Paynet அறிவித்திருந்தது.

மேலும் RM5,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை உட்படுத்திய பண வர்த்தனை நடவடிக்கைகளுக்கு மட்டுமே 50 காசு கட்டணமாக விதிக்கப்படும் என்று PayNet கூறியிருந்தது.

DuitNow QR சேவையானது QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களுக்கு இடையே பணப் பரிமாற்றத்தை செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here