செத்துக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகள். 140 தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்து!

புத்ராஜெயா,
பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கும் 26 தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்குடன் பேச்சு வார்த்தை நடத்துவேன் என்று மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் நேற்று அறிவித்தார்.

பேராக்கில் 10 தமிழ்ப்பள்ளிகளிலும் கெடாவில் 6 தமிழ்ப்பள்ளிகளிலும் பகாங்கில் 4 தமிழ்ப்பள்ளிகளிலும் சிலாங்கூரில் 3 தமிழ்ப்பள்ளிகளிலும் ஜோகூரில் 2 தமிழ்ப் பள்ளி களிலும் நெகிரி செம்பிலானில் 1 தமிழ்ப்பள்ளியிலும் 10க்கும் குறைவான மாண வர்களே கல்வி கற்கின்றனர். இந்தத் தமிழ்ப்பள்ளிக்கூடங்களைக் காப்பாற்றா விட் டால் அவை விரையில் மூடப்படும் அபாயத்திற்குத் தள்ளப்படும்.

இந்தப் பள்ளிக்கூடங்கள் மூடப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய இடமாற்றம் அவசிய மாகின்றது என்று அருண் துரைசாமி நேற்று அமைச்சர் சிவகுமாரிடம் கோரிக்கை வைத்தார். குமரன் மாரிமுத்து, ராஜசேகரன் மாரிமுத்து, செல்வராஜ், டத்தோ மன்னன் ஆகியோரைக் கொண்ட தமிழ்ப்பள்ளி தன்னார்வத் தொண்டு அமைப்பினர் நேற்று புத்ராஜெயாவில் அமைச்சர் சிவகுமாருடன் சந்திப்பு நடத்தினர்.

மொத்தம் 140 தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்யத் தவறினால் அந்தப் பள்ளிக ளுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இட மாற்றம் கடந்த 40 ஆண்டுகளில் கிராமப்புறங்கள், தோட்டப்புறங்களில் இருந்து இந்தியர்கள் பெரிய அளவில் நகர்ப்புறங்களுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட 89 விழுக்காடு இந்தியர்கள் இப்போது நகரங்களில்தாம் வாழ்கிறார்கள்.

இந்நிலையில் 67 விழுக்காடு தமிழ்ப் பள்ளிகள் இன்னும் கிராமப்புறங்களிலும் தோட் டப்புறங்களிலும்தான் செயல்படுகின்றன. இவற்றுள் 62 விழுக்காடு தமிழ்ப்பள்ளிகள் தோட்டங்களுக்குச் சொந்தமான இடங்களில் அமைந்திருக்கின்றன என்று இச்சந்திப் பில் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தமக்கு நன்றாகத் தெரியும் என்று சிவகுமார் இச்சந்திப்பில் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளிகளுக்காக நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் எழுப்பியிருக்கிறேன். பல போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கி றேன்.அந்த அடிப்படையில் 10க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கும் 26 தமிழ்ப்பள்ளிகள் பிரச்சினை குறித்து விரைவில் கல்வி அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்துவேன் என்று சிவகுமார் குறிப்பிட்டார்.

இதற்கிடையே பெட்டாலிங் ஜெயா, பூச்சோங், ஜோகூர் பாரு போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் புதிய தமிழ்ப்பள்ளிகள் தேவை எனவும் இச்சந்திப்பில் வலி யுறுத்தப்பட்டது. குறைந்த மாணவர்கள் உள்ள 140 தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்தால் மாணவர்கள் எண்ணிக்கை 120,000ஆக உயரும் எனவும் இச்சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது. தற்போது தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கை 85,424ஆக உள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here