அலோர் ஸ்டார்:
கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 136 குடும்பங்களைச் சேர்ந்த 408 பேராகக் குறைந்துள்ளது. இது நேற்று இரவு 147 குடும்பங்களைச் சேர்ந்த 437 பேராக இருந்தது.
பாதிக்கப்பட்ட அனைவரும் கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் இன்னும் செயல்படும் மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (APM) பேரிடர் மேலாண்மை செயலகத்தின் தலைவர் கெடா மேஜர் (PA) முஹமட் சுஹைமி முகமட் ஜைன் கூறினார் .
“தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது, இன்று வானிலை நன்றாக இருந்தால், பாதிக்கப்பட்ட அனைவரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.