அடுத்த வாரம் சிலாங்கூரில் உள்ள 49 முக்கிய இடங்களில் நீர் விநியோகத் தடை

கோலாலம்பூர்:

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 49 முக்கிய இடங்களில் அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட நீர் விநியோக தடை ஏற்படவுள்ளது என்று ஆயிர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர், உலு லங்காட், பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களை உட்படுத்திய மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் போன்ற முக்கிய இடங்கள் இத்தடையால் பாதிப்படையும் என்று ஆயர் சிலாங்கூர் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி அப்பாஸ் அப்துல்லா கூறினார்.

நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு தண்ணீர் டேங்கர்கள், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார் அவர்.

அடுத்த வாரம் அக்டோபர் 10ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நீர் விநியோகத்தடை, அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த நீர் விநியோகத் தடை இரவு 7 மணிக்கு வழக்க நிலைக்குத் திரும்பும் எனவும் அது கூறியது. இம்மாதம் 12ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் நீர் விநியோகம் சீரான நிலைக்குத் திரும்பும் .

நீர் விநியோகத் தடை குறித்து பொதுமக்கள் ஆயிர் சிலாங்கூரின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் ஆகிய செயலிகள் உட்பட 15300 என்ற தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அப்பாஸ் அப்துல்லா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here