உள்ளே வரும் அமெரிக்கா? ஆட்டத்தை கலைத்து ஆட தயாராகும் இரண்டு பெரும் புள்ளிகள்

இஸ்ரேல்: காசா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதலை தொடுத்துள்ள நிலையில், அமெரிக்காவிடம் சில உதவிகளையும் இஸ்ரேல் கேட்டிருக்கிறது. ஒருவேளை அமெரிக்க உதவி செய்வதாக இஸ்ரேலுக்குள் வந்தால் ஈரானுக்கு இரண்டு பலம் வாய்ந்த நாடுகள் உதவி செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இதை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது.

ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை. இந்த பின்னணியில்தான் நேற்று முன்தினம் காலை ஹமாஸ், பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது.

ஊடுருவல்: ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜீப் மூலம் ஊடுருவியுள்ளார்கள்.

ஹெஸ்புல்லா: பல ஆண்டு காலமாக தங்களை ஒடுக்கி வைத்திருந்த இஸ்ரேல் மீது மொத்த பகையையும் ஹமாஸ் படையினர் இன்று தீர்த்துக்கொண்டனர். இந்நிலையில், காசாவுக்கு எதிராக இஸ்ரேல் இதுவரை நடத்தி வந்த தாக்குதலை தீவிரப்படுத்தி அதற்கு போர் என பெயரிட்டுள்ளது. ஆனால் மறுபுறம் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்திய 48 மணி நேரத்தில் லெபனான் அருகே இஸ்ரேல் கட்டுப்படுத்தி வைத்திருந்த பகுதியை லெபனானின் ‘ஹெஸ்புல்லா’ எனும் போராளிகள் குழுவினர் முழுமையாக தாக்கி அழித்துள்ளனர்.

இஸ்ரேலின் கோபம்: உலகின் மிகவும் சக்தி வாய்ந்த உளவு அமைப்பு என்று தங்களை சொல்லிக்கொள்ளும் இஸ்ரேலின் ‘மொசாட்’ ஹமாஸின் தாக்குதலை முன்கூட்டியே கணிக்க தவறியது. மொசாட் மட்டமல்ல, இஸ்ரேல் பாதுகாப்பு ஏஜென்சியான ‘ஷின் பெட்’, இஸ்ரேல் பாதுகாப்பு படை, மொசாட்டின் வெளி உளவு அமைப்பு என ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்பே இந்த தாக்குதலை முன்கூட்டே கணிக்க தவறிவிட்டது. மத்திய கிழக்கில் தங்களை இரும்பு கோட்டை என்று சொல்லிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு இது பலத்த அடிதான். இதை செய்தது காசா எனும் திறந்த வெளியில் சிறையில் இருந்த ஹமாஸ் எனும் சிறிய அமைப்பு என்கிறது போது இஸ்ரேலின் கோபம் இன்னும் உச்சிக்கு ஏறியிருக்கிறது.

அமெரிக்கா: எனவேதான் அமெரிக்காவிடம் சில உதவிகளை மறைமுகமாக இஸ்ரேல் கேட்டிருக்கிறது. இதன்படி விமானம் தாங்கிய போர்க்கப்பலான USS Gerald R Ford மற்றும் அதனுடன் வரும் போர்க்கப்பல்களை கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அமெரிக்கா அனுப்பியிருக்கிறது. இதில் ஏராளமான நவீன போர் விமானங்கள் இருக்கின்றன. இந்நிலையில் ஒரு வேளை இந்த கப்பல் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒரேயோரு குண்டை வீசினால் கூட பிரச்னை வேறு மாதிரியாக சென்றுவிடும்.

திட்டம்: அதாவது இந்த ஒரு புள்ளிக்காக தான் ரஷ்யாவும், சீனாவும் காத்திருக்கின்றன. பாலஸ்தீனம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் இந்த இரு நாடுகளும் ஈரானுக்கு முழு ஆதரவை கொடுக்கும். ஆயுதங்களையும் கொடுக்கும். இது தவிர தற்போதைய சூழலில் ரஷ்யா ஐநா சபையில் ஏதேனும் தீர்மானத்தை கொண்டு வந்தால் அதை 95 சதவிகிதமான ஆப்பிரிக்க நாடுகள் ஆதரிக்கும். இதே பாலஸ்தீன பிரச்னை எனில் உலகின் 50 இஸ்லாமிய நாடுகளும் எந்த வித வேறுபாடும் இன்றி ரஷ்யாவின் பின் அணிதிரளும். போதுமே! இதை வைத்து இஸ்ரேலையும், அமெரிக்காவையும் போர் குற்றாவளி கூண்டில் ஏற்றிவிடலாம்.

போர்: அதுமட்டுமல்லாது ஆப்பிரிக்க, இஸ்லாமிய நாடுகள் ரஷ்யா, சீனா பின்னாடி அணி திரண்டால் உலக நாடுகள் இரண்டாக பிளவுபட்டுவிடும். இப்போதைய நிலைமையில் ரஷ்யா அமெரிக்காதான் வலிமையாக இருக்கின்றன. எனவே போர் மிகவும் கொடூரமாக இருக்கும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here