எம்ஜிஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவித்ததால் பரபரப்பு

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித் துண்டு அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக – பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில் எம்ஜிஆர் சிலைக்கு காவி அணிவிக்கப்பட்டது அதிமுக தொண்டர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி ரவுண்டானாவில் உள்ள பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித் துண்டு மற்றும் கையில் காவி துணி போட்டுச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டை அணிவித்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக சிலை அருகே உள்ள கடைகளில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதோடு அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிமுக பாஜக கூட்டணி அண்மையில் முறிந்துள்ளது. பேரறிஞர் அண்ணா பற்றியும், அதிமுக தலைவர்கள் பற்றியும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வந்தது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் எம்ஜிஆர் சிலைக்கு அடை யாளம் தெரியாத நபர்கள் காவித் துண்டு அணிவித்தது அதிமுகவினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதியில் அதி முக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி யில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து எம்ஜிஆர் சிலையில் போடப் பட் டிருந்த காவி துண்டை போலீசார் அகற்றினர். தொடர்ந்து காவல்துறையினர் காவி துண்டை போட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here