நிபோங் தெபால்:
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (NSE) 158 ஆவது கிலோமீட்டரில் , இன்று காலை இரண்டு வாகனங்கள் மோதிய பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர் ஆர்.தாமோதரன் (வயது 63) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதிகாலை 1.45 மணியளவில் விபத்து குறித்து சுங்கை பாகாப் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அதன் செயல்பாட்டு அதிகாரி முகமட் பைசல் கான் முகமட் ஹசன் கூறினார்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, பேரோடுவா கெம்பாரா மற்றும் டிரெய்லர் லோரி விபத்துக்குள்ளாகியிருந்தது, விபத்தால் கார் ஓட்டுனர் இருக்கையில் சிக்கிக்கொண்டிருந்தார் என்றும், சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அங்கிருந்த துணை மருத்துவர்களால் உறுதியளிக்கப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.
மேலதிக நடவடிக்கைக்காக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும், அதிகாலை சுமார் 3.01 மணியளவில் மீட்பு நடவடிக்கை முழுமையாக முடிந்தது என்றும் முகமட் பைசல் கூறினார்.