ஹலால் தொழில்துறையை மேம்படுத்தும் திட்டம்;25,0000 வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் -துணைப் பிரதமர்

கோலாலம்பூர்:

லேசிய அரசாங்கம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஹலால் தொழில்துறையை மேம்படுத்தும் பெருந்திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தால் ஏறக்குறைய 25,000 வேலைகள் உருவாகும் என துணைப் பிரதமர் டாக்டர் அஹமட் ஜாஹிட் ஹமிடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஹலால் துறையை மேம்படுத்துவதற்கான விரிவான அணுகுமுறையை தனது அறிக்கையில் ஜாஹிட் தெளிவுபடுத்தினார்.

“மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு அமைப்பின் ஒத்துழைப்புடன் இத்துறையின் தரத்தை உயர்த்துவது திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்,” என்று கூறிய திரு ஸாஹிட், ஹலால் சான்றிதழ் வழங்கும் நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறோம்,” என்றார்.

தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் பயிற்சியின்கீழ் (TVET) ஹலால் நிர்வாகத்தில் புதிய தலைமுறை பட்டதாரிகளுக்குப் பயிற்சியளிப்பது குறித்து அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

“இத்தகைய பட்டதாரிகள் ஹலால் தொழில்துறையில் அதிகரித்துவரும் நிபுணர்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்வார்கள். இவர்கள் தணிக்கையாளராகவும் ஹலால் நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருப்பார்கள். உயர்கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் இது சாத்தியமாகும்.

“ஹலால் துறையில் உள்ள வேலை வாய்ப்புகளும் மலேசியாவின் பொருளியல் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றும்.

ஹலால் துறையில் முஸ்லிம்களுடன் முஸ்லிம் அல்லாதவர்களும் இணைந்து இணக்கமாகச் செயல்பட முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

“இது, நமது தயாரிப்பு, இதற்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். இதில் நாம் அனைவரும் ஒத்துழைத்து முன்னேறுவோம்,” என்று துணைப்பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here