கோலாலம்பூர்:
இன்று காலை 9 மணி நிலவரப்படி நாட்டின் இரண்டு இடங்களில் புகைமூட்டம் காரணமாக காற்றின் தரத்தை ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியது.
இதில் மலாக்காவின் புக்கிட் ரம்பாயில் அதிகபட்சமாக காற்று மாசுக்குறியீடு 153 ஆகப் பதிவானது. மேலும் ஜோகூரின் லார்க்கினில் காற்று மாசுக்குறியீடு 126 பதிவானது.
இதற்கிடையில், ஏனைய 57 பகுதிகள் மிதமான API வாசிப்பைக் கொண்டிருந்தன என்றும் மற்ற ஒன்பது பகுதிகள் நல்ல காற்றின் தரத்திற்கான API வாசிப்பைக் கொண்டிருந்தன என்று சுற்றுச்சூழல் துறையின் காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS) இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.