சரவாக், சபாவில் 4,839 ஹெக்டேர் நிலத்தில் நெல் சாகுபடி செய்ய அரசு ஒப்புதல்

கோலாலம்பூர்:

பா மற்றும் சரவாக்கில் நெல் சாகுபடிக்காக 4,839 ஹெக்டேர் நிலத்தை அரசாங்கம் மேம்படுத்தி வருவதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சபாவில் 2,159 ஹெக்டேர் நிலம், அதாவது பெலூரான் மற்றும் கோத்தா பெலுடில் என்பனவும் சரவாக்கில் 2,680 ஹெக்டேர் நிலம் பாடாங் லுபாரில் உள்ளதாகவும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

“50,000 ஹெக்டேர் திட்டம் நீண்ட கால திட்டமாக இருக்க வேண்டும், ஆனால் இதுவரை 4,839 ஹெக்டேர் சபா மற்றும் சரவாக்கில் நெல் பயிற்செய்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

சபா மற்றும் சரவாக்கில் 50,000 ஹெக்டேர் பரப்பில் நெற்பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பாக டத்தோஸ்ரீ முகமட் ஷாஃபி அப்டலின் (Warisan-செம்போர்னா) கேள்விக்கு கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் அஹ்மட் ஜாஹிட் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here