ஊழலில் ஈடுபடும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் உரிமத்தை இழக்கும் அபாயம் உள்ளது: லோக்

ஓட்டுநர் நிறுவனங்கள் சட்ட விரோதமான “கோபி-ஓ” ஓட்டுநர் உரிம கும்பலுடன்  ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டறியப்பட்டால் அவற்றின் இயக்க உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று அந்தோணி லோக் கூறுகிறார். வாகனம் ஓட்டும் சோதனையின் போது ஊழல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். ஏனெனில் இதுபோன்ற செயல்கள் சாலையைப் பயன்படுத்துபவர்களின் குறிப்பாக இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார்.

ஓட்டுநர் பள்ளிகள் ஊழலில் ஈடுபடக்கூடாது. இந்த பிரச்சினையை கட்டுப்படுத்தாவிட்டால் இளைஞர்கள் பலியாவார்கள். உயிரைக் காப்பாற்றுவதே எங்கள் குறிக்கோள். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) ஓட்டுநர் பள்ளி ஒன்றின் 10ஆவது ஆண்டு விழாவில் அவர் தனது உரையில், சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் ‘lesen terbang’ சலுகைகளால் பொதுமக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எலக்ட்ரானிக் டிரைவிங் டெஸ்ட் சிஸ்டம் (eTesting) என்பது தொழில்துறையில் ஊழலை எதிர்த்துப் போராட அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு செயல்திறன்மிக்க, ஒருமைப்பாடு சார்ந்த நடவடிக்கையாகும் என்றார். 2030 ஆம் ஆண்டு கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர், ஓட்டுநர் நிறுவனங்களுக்கு இந்த அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார். அதிக ஒருமைப்பாட்டுடன் ஒரு அமைப்பை உறுதி செய்வதற்காக eTesting ஐ செயல்படுத்த அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.

சட்டவிரோத ஓட்டுநர் உரிமம் தொடர்பான பிரச்சினையை நாங்கள் நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம். ஆனால் நேர்மறையான முன்னேற்றங்களை நான் காண்கிறேன். சில கும்பல்கள் இன்னும் முறையை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், ஊழலை ஒழிப்பதற்கான எங்கள் முயற்சிகளை நாங்கள் தொடருவோம் என்று அவர் கூறினார்.

கடந்த ஏப்ரலில் இ-டெஸ்டிங் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஓட்டுநர் நிறுவனங்களிடமிருந்து அமைச்சகம் பல விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக லோக் கூறினார். சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) இந்த விண்ணப்பங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், முதல் தொகுதி விரைவில் அவர்களின் ஒப்புதல் கடிதங்களைப் பெறும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here