Hi Uncle Anwar… பள்ளி மாணவி மரியத்தின் கடிதம் பிரதமரை செயலில் இறங்கத் தூண்டியது

 ஒன்பது வயது பள்ளி மாணவி, “Uncle Anwar” க்கு கைப்பட எழுதிய கடிதம், பள்ளி கழிவறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க பிரதமரை தூண்டியுள்ளது. ஒரு தேசிய தொடக்கப் பள்ளியில் 3 ஆம் ஆண்டு படிக்கும் மரியம், அன்வார் இப்ராஹிமிற்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினார். அங்குள்ள கழிவறைகளின் நிலையைப் பார்க்க தனது பள்ளிக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

முழு பள்ளிக்கும்  இரண்டு  கழிப்பறைகள் மட்டுமே உள்ளன என்றும், எனது பள்ளிக்கு அதிக கழிப்பறை கிண்ணங்களைக் கொண்டு வருமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டார். மேலும் தனது பள்ளியின் கழிவறைகள் சுத்தமாக இல்லை என்று தான் உணர்ந்ததாக அவர் கூறினார்.

புனரமைக்கப்பட்ட பள்ளிக் கழிவறைகளின் பல படங்களை நான் பார்த்தேன். இருப்பினும், எனது பள்ளி அப்படித் தெரியவில்லை  என்று அவர் தனது இரண்டு பக்க கடிதத்தில் அன்வர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“வணக்கம் அன்வார்” என்று தொடங்கிய கடிதம், மரியம் “Uncle Anwar”க்கு நன்றி தெரிவிப்பதோடு முடிந்தது. அதற்கு பதிலளித்த அன்வார், நன்றி மரியம். பள்ளியில் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக நான் இன்னும் விடாமுயற்சியுடன் பணிபுரிந்து, இப்பிரச்சினையை விரைவாகத் தீர்ப்பேன். கடந்த வெள்ளிக்கிழமை, 2024ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, ​​சுமார் 8,354 பள்ளிகளில் கழிவறைகள் பழுதுபார்க்கும் பணி இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here