Rebirth: Reformasi, Resistance, And Hope in New Malaysia புத்தக ஆசிரியர் தேசதுரோக குற்றத்திற்காக கைது

Rebirth: Reformasi, Resistance, And Hope in New Malaysia என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தின் ஆசிரியர் தேசத்துரோக குற்றத்திற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கீன் வோங் தற்போது டாங் வாங்கி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று உரிமைக் குழுவான சுவாராம் அமைப்பின் நிர்வாக இயக்குநர்  துரைசாமி எஃப்எம்டியிடம் தெரிவித்தார்.

அவர் இன்று முன்னதாக தனது கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்த போது, கிளானா ஜெயா குடிநுழைவு அலுவலகத்தில் அவர் கைது செய்யப்பட்டார் என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார். விசாரணையின் போது வோங்கின் தொலைபேசியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

20202 ஆம் ஆண்டில், இந்த புத்தகம் அதன் அட்டையில் தேசிய சின்னத்தைப் போன்ற ஒரு படத்தைக் காட்டிய பின்னர் சர்ச்சையைப் பெற்றது. இது ஒரு நிர்வாணக் குழந்தையுடன் இரண்டு புலிகளால் சூழப்பட்டுள்ளது. மனித உருவம் கொண்ட முகத்துடன் முதலையின் மீது காலடி வைத்தது. வெளியீட்டாளரான Gerakbudaya, பின்னர் வடிவமைப்புக்காக மன்னிப்பு கேட்டார். ஆனால் தேசிய சின்னத்தை அவமதிக்கும் அல்லது கேலி செய்யும் எண்ணம் இல்லை என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here