இஸ்ரேல் பயணமாகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை புதன்கிழமை இஸ்ரேல் செல்கிறார்.

தன்னை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் திரு பைடனின் பயணம் அமைவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இன்று (அக்டோபர் 17) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

காஸாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக தரைவழித் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தயாராகிவரும் வேளையில், அந்நாட்டுடனான ஒருமைப்பாட்டை பைடன் மறுஉறுதிப்படுத்துவார் என்றும் பிளிங்கன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here