கங்கார்:
20 கிலோ கஞ்சா கடத்தியதாக இரண்டு நண்பர்கள் மீது நேற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர், முஹமட் அஸ்லான் ஷா அப்துல் ஜாபர், 28, ஃபௌசன் ஃபரிஸ் முஹமட் ஃபட்ஸ்லி, 27, ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அனா ரோசானா முகமட் முன்நிலையில் வாசித்த பின்னர், அவர்கள் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் புரிந்ததாக தலையசைத்தனர், ஆனால் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றச்சாட்டின்படி, இருவரும் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் அராவ்வில் உள்ள கோலா பெர்லிஸ்-சங்லூன் நெடுஞ்சாலையில் உள்ள பொலிடெக்னிக் உலு பாவ் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சந்திப்பு பகுதியில் இந்த குற்றத்தை செய்தனர்.
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B (1) (a) இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது, தண்டனைச் சட்டத்தின் 34வது பிரிவுடன் சேர்த்துப் படிக்கப்பட்டு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர் அத்தோடு 12க்கும் குறையாமல் பிரம்படிகளும் விதிக்க வழிசெய்கிறது.
இவ்வழக்கில் ஜாமீன் வழங்கப்படவில்லை வழக்கை மீண்டும் செவிமடுக்க நீதிமன்றம் ஜனவரி 17, 2024ஐ நிர்ணயித்தது.



















