உடனே ராஜினாமா செய்.. இல்லாவிட்டால்..? அமெரிக்காவில் சீக்கிய மேயருக்கு கொலை மிரட்டல்

அமெரிக்காவில் சீக்கியர்களுக்கு எதிரான இன பாகுபாடு அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் சமீபத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம், ஹோபோகன் நகரின் மேயராக இருப்பவர் ரவீந்தர் எஸ்.பல்லா. சீக்கிய மதத்தைச் சேர்ந்த இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் அடுத்தடுத்து மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்துவிடுவதாக அந்த கடிதத்தில் மிரட்டி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here