பினாங்கில் 8 மாதங்களில் 697 சிறார் சித்திரவதை சம்பவங்கள்

ஜோர்ஜ் டவுன்:

பினாங்கில் இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையில் 697 சிறார் சித்திரவதை சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 184 சம்பவங்கள் வட செபாராங் பிறை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன என்று சமூக நல இலாகா தரவு கூறுவதாக மகளிர், குடும்ப, சமூக நலத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக கெப்பாலா பாத்தாஸ், கோலா மூடா சிறார் நடவடிக்கை மையத்தில் நடைபெற்ற சிறார் பாதுகாப்பு நிகழ்ச்சியில் இந்த தரவி வெளியிடப்பட்டது.

அதிலும் சிறார் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் சமூக தொடர்பினை வலுப்படுத்தவும் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்லட வேண்டுமென இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ டாக்டர் மஸியா சே யூசோப் வலியுறுத்தினார்.

குறிப்பாக அதிகரித்து வரும் டிஜிட்டல் மய சவால்கள் சிறார்களுக்கு எதிரான சித்திரவதை, சைபர் பகடிவதை போன்ற அபாயங்களுக்கு வித்திடுகிறது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here