சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்த ஆடவருக்கு 6 மாத சிறை, RM2,500 அபராதம்

தெலுக் இந்தான்:

பாரம்பரிய மருந்து கடையில் பணிபுரியும் ஆடவர் ஒருவர், சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்ததற்காக, 6 மாத சிறைத் தண்டனையும், RM2,500 அபராதமும் விதித்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

24 வயதான லீவ் மிங் ஹுய் என்ற ஆடவர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, மாஜிஸ்திரேட் டி.அஷ்வினி தண்டனையை வழங்கினார்.

கடந்த மே 29 ஆம் தேதி மாலை சுமார் 4.20 மணியளவில், லங்காப் குடியிருப்பிலுள்ள வீடு ஒன்றில் சிறுவர்களின் ஆபாசப் படங்கள், அதாவது 19,011 வீடியோக்கள் மற்றும் குழந்தைகளின் படங்கள் அடங்கிய பென் டிரைவ் (pen drive) வைத்திருந்ததாக லீவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 (சட்டம் 792) பிரிவு 10ன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது RM10,000க்கு மிகாமல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here