நிறங்களின் மருத்துவ குணங்கள்!

மருந்தில்லா மருத்துவ முறைகளில் வண்ண மருத்துவத்திற்கு முக்கிய இடம் உண்டு. நாம் அன்றாடம் பார்க்கும், பயன்படுத்தும் அழகிய வண்ணங்களுக்கு நமது உடலில் உள்ள நோய்களை போக்கும் ஆற்றல் உண்டு. அந்த காலத்தில் இயற்கை மருத்துவத் தில் இந்த நிறங்களை பயன்படுத்தி சிகிச்சை அளித்தனர். நமது உடலில் மற்றும் மன தில் உள்ள குறைபாடுகளை கணித்து அக்குறைபாடுகளை போக்க உடலுக்கும் மன திற்கும் வலிமைதரும் வண்ணங்களை நவரத்தின கற்களை கொண்டு மோதிரங்கள், ஆபரணங்களாக செய்து அணிந்து கொண்டனர்.

அந்தவகையில், நாம் அன்றாடம் குடிக்கும் சாதாரண குடிநீரை வண்ண நீராக தயா ரித்து குடிப்பது, உடலில் வண்ண ஒளிகளை பாய்ச்சுவது ஆகியவற்றின் மூலம் நமது உடலில் உள்ள பிணிகளை போக்க முடியும். சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களில் உள்ள நிறங்களை பயன்படுத்தி மிகவும் சுலபமாக இந்த வண்ண சிகிச்சையைச் செய்துகொள்ளலாம்.

என்னென்ன நிறங்கள் பயன்படுத்தலாம்

* ஊதா
* கருநீலம்
* நீலம்
* பச்சை
* மஞ்சள்
* ஆரஞ்சு
* சிகப்பு

இந்த ஏழு நிறங்களையும் ஆங்கிலத்தில் சுருக்கமாக VIBGYOR (விப்ஜியார்) என்று அழைப்பார்கள். இதில் ஊதா, கருநீலம், நீலம் ஆகிய மூன்று நிறங்களும் குளிர்ச்சித் தன்மை கொண்டது. பச்சை நடுநிலையான தன்மை கொண்டது. மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு ஆகிய மூன்று நிறங்களும் வெப்ப தன்மை கொண்டது.

வண்ண நீர் தயாரிக்கும் முறை

தங்ளுக்கு தேவையான வண்ணம் கொண்ட சுத்தமான கண்ணாடி குடுவையை எடுத்துக் கொள்ளவும். தேவையான வண்ணத்தில் கண்ணாடி குடுவை இல்லையென் றால், கடைகளில் கிடைக்கும் ஒளி ஊடுருவக்கூடிய வண்ண நெகிழிக் காகிதங் களை வாங்கி குடுவையின்மேல் சுற்றிக்கொண்டு பயன்படுத்தலாம். அதில் காய்ச்சி ஆறவைத்த சுத்தமான நீரை ஊற்றி மூடியிட்டு நன்றாக சூரியஒளி படும் இடத்தில் ஐந்து முதல் ஆறு மணிநேரம் வைக்கவும். பின்னர் இதை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை 50ml வீதம் பருகலாம்.

வண்ண நீரால் தீரும் நோய்கள்

ஊதா: நரம்பு சார்ந்த நோய்கள் குணமாகும், நரம்பு மண்டலம் வலிமை பெறும், எலும்பு, எலும்பு மஜ்ஜை, வழுக்கை, கண் சார்ந்த நோய்கள், பிரசவகால வேதனை யைக் குறைக்கும்.

கருநீலம்: வாய், கண், மூக்கு, தொண்டை சம்மந்தமான நோய்கள். சுவாச நோய்கள், அனைத்து வகையான தலைவலிகள், ஆஸ்துமா, காசநோய், மலச்சிக்கல், ஜீரண மண்டலக் கோளாறு, வலிப்பு மற்றும் மனநோய்.

நீலம்: நீல நிறத்தின் சிறப்பு என்னவென்றால் இது உடலில் உள்ள விஷத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. வெப்பம் சார்ந்த நோய்கள், மலேரியா, காய்ச்சல், மூட்டுவலி, தோல் நோய்கள், கொப்பளம், மூக்கில் நீர் வடிதல், மனஅழுத்தம், காயங்கள் மற்றும் அனைத்து விதமான வலிகள்.

பச்சை: இதயம் சம்பந்தமான கோளாறுகள், புற்றுநோய், குளிர்கால காய்ச்சல், தொற்றுநோய், ரத்த அழுத்தம், கர்ப்பப்பை நோய்கள், குடல் புண், தாது விருத்தி,
பார்வைத் திறனை அதிகரிக்கும்.

மஞ்சள்: நீரிழிவு நோய், சிறுநீரக நோய்கள், கல்லடைப்பு, மஞ்சள் காமாலை, அஜீரணம், தொழுநோய், முடக்குவாதம் மற்றும் மலச்சிக்கல்.

ஆரஞ்சு: சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்களை நீக்கும். சிறுநீரக வீக்கம், குடல் வீக்கம், குடல் இறக்கம் சரிசெய்யும், மனதிற்கு உற்சாகம் தரும், உடல் வெப்பத்தை நாடித்துடிப்பை தூண்டும். பால் சுரப்பை அதிகரிக்கும்.

சிவப்பு: ரத்த சோகை, ரத்த அழுத்தம், பக்கவாதம், காசநோய், உடல் பலகீனம், சோர்வு, உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், மற்றும் இது உடல் வெப்பத்தை அதிகரிக்கும், உணர்ச்சிகளை தூண்டிவிடும்.

உடலில் வண்ண ஒளிகளை பாய்ச்சுதல்

* வண்ண கண்ணாடிகளைக் கொண்டு சூரிய ஒளி மூலம் உடலில் வண்ணங்களைப் பாய்ச்சுதல்,
* வண்ண மின்விளக்குகளைப் பொருத்தி உடலில் வண்ணங்களைப் பாய்ச்சலாம்.
* டார்ச் லைட்டில் வண்ணத் தாள்களை சுற்றி அதன்மூலம் உடலில் வண்ணங்களை பரவச் செய்யலாம்.
* நோய் குறியுள்ள இடங்களில் வண்ணங்களை பரப்புவதன் மூலம் நோய்களை தீர்க்கலாம்.
* ஹார்மோன் சுரப்பிகளைத் தூண்டி அதை சமநிலைப்படுத்தலாம்.
* நமது உடலில் உள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களில் வண்ணங்களை பரப்புவதன் மூலம் சக்கரங்களுக்கு ஆற்றலைப் பெருக்கி நோய்கள் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here