பாங்காக் –
நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை, சோங்க்லா வில் உள்ள Sadao குடிவரவு சோதனைச் சாவடி வழியாக நாட்டிற்குள் நுழையும் பயணி கள் TM6 குடியேற்றப் பாரத்தைச் சமர்ப்பிக்க தேவையில்லை எனவும் அதற்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தாய்லாந்து அறிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் காலங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
சடாவோ குடிவரவு சோதனைச் சாவடியைக் கடக்கும்போது வெளிநாட்டவர்கள், குறிப் பாக மலேசியர்கள் செல்லுதல் மற்றும் வருதலுக்கான பாரத்தை சமர்ப்பிப்பதற்கான தேவையை தற்காலிகமாக நிறுத்த அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு அரசாங்கத்தின் துணைப் பேச்சாளர் கரோம் போன்போன்க்லாங் தெரிவித்தார்.
தாய்லாந்தின் சுற்றுலா ஆணையத்தை (TAT) மேற்கோள் காட்டி, அதிகமாக சுற்றுலாப பயணிகள் வரும் காலங்களிலும், நீண்ட வார விடுமுறை நாட்களிழும் குடிவரவு சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல அவர்களுக்கு இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஆகும் என்றார்.
TM6 பாரத்தை சமர்ப்பிப்பதில் இருந்து வெளிநாட்டவர்களுக்கு தற்காலிகமாக விலக்கு அளிப்பது, குடியேற்ற செயல்முறையை விரைவுபடுத்தும், சோதனைச் சாவடிகளில் நெரிசலைக் குறைக்கும், தாய்லாந்தின் மதிப்பை மேம்படுத்தும் மற்றும் பிராந்தி யத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும். இது நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க உதவும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 100,000 மலேசியர்கள் சடாவோ குடிநுழைவு சோதனைச் சாவடியைக் கடந்து செல்வதாக குடியேற்ற புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று அவர் கூறினார்.
தாய்லாந்திற்கு வருகை தந்தவர்களின் பட்டியலில் மலேசிய சுற்றுலாப் பயணிகள் 3.1 மில்லியன் பார்வையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளதாகவும், மலேசிய சுற்றுலாப் பயணி ஒருவர் தங்கள் வருகையின் போது ஒரு நபருக்கு 16,588 பாத் செலவழிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.