ஓடும் காரின் மேல் திடீரென வந்த மலைப்பாம்பு; கோலாலம்பூரில் சம்பவம்

கோலாலம்பூர்:

நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருந்த காரின் கண்ணாடியில் திடீரென மலைப்பாம்பு தோன்றியதையடுத்து, கார் ஓட்டுநர் தமது வாகனத்தைத் தீயணைப்பு நிலையத்திற்குத் திருப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இச் சம்பவம் கோலாலம்பூரில் நிகழ்ந்ததாக டுவிட்டர் சமூக ஊடகத்தில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

மலைப்பாம்பு வீசியெறியப்படுவதைத் தடுக்க காரை மெதுவாகச் செல்லும்படி, காரிலிருந்த பெண் ஒருவர் ஓட்டுநரிடம் சொல்வது காணொளியில் கேட்கிறது.

கார் கண்ணாடியில் சிறிது நேரம் ஊர்ந்த அந்த மலைப்பாம்பு, பின்னர் காரின் கூரைப்பகுதிக்குச் சென்றது.

“பதற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தபோதும் அமைதியாக இருக்க முயன்றேன். அந்த மலைப்பாம்பு தப்பிக்க முயல்வதுபோல் தெரிந்தது. ஆனாலும், கார் இயக்கத்தில் இருந்ததால் அதனால் முடியவில்லை,” என்று சம்பவத்தைப் படம்பிடித்த பெண் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, காரை சைபர்ஜெயா தீயணைப்பு நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார் அதன் ஓட்டுநர். அங்கு தீயணைப்பு வீரர்கள் அந்த மலைப்பாம்பை அகற்ற உதவினர் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here