இந்தியத் தலைவர்கள் தொடர்பில் அவதூறுகள் – டத்தோ ரமணன் வருத்தம்

கோல குபு பாரு:

நடைபெறவுள்ள கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கு முன்னதாக, இந்திய சமூகத்தின் வாக்குகளைப் பெறும் நோக்கில் பலர் அவதூறு மற்றும் தவறான தகவல்களை ஆயுதமாகப் பயன்படுத்தி வருவது வருத்தமளிப்பதாக டத்தோ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

“பொறுப்பற்ற சில தரப்பினர் அவதூறு பரப்புவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது, ஏனென்றால் அவர்கள் தவறான தகவல்களைப் பரப்பினால், அது இந்த சமூகத்திற்கு வழங்கப்பட்ட உதவி அவர்களை சென்றடைவதை தடுக்கும் ல் என்றும், இது போன்ற பயனற்ற செயல்கள் சமூகத்தின் வளர்ச்சியில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் ஆகவே இவை தவிர்க்கப்பட வேண்டும் என்றும், தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் கூறினார்.

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில தரப்பினர் தொடர்ந்து பொய்களைச் சொல்லி மக்களை குழப்பி வருகின்றனர்.

குறிப்பாக ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள மஇகா இந்த கோல குபு பாரு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கிறது என எதிர்கட்சிகள் தெரிவித்திருந்தன.

ஆனால் அக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணனும் இங்கு மஇகா தேர்தலை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ளனர்.

மேலும், இந்த நிகழ்வில் ஜசெக தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இது தான் ஒற்றுமை அரசாங்கத்தின் பலம். எனவே இந்த நிகழ்வின் மூலம் எதிர்கட்சிகள் பொய் தான் கூறுகிறார்கள் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது. ஆகவே பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, இன்று (ஏப்ரல் 25) இங்குள்ள இந்திய சமூகத்துடனான மலேசிய இந்திய மாற்றுப் பிரிவு (மித்ரா) அமர்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here