பழம்பெரும் நடிகர் பாலையாவின் மகன் நடிகர் ஜூனியர் பாலையா இன்று காலமானார். அவருக்கு வயது 70.
பழம்பெரும் நடிகர் பாலையாவின் மூன்றாவது மகன் ஜூனியர் பாலையா. ரகு என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சினிமாவுக்காக ஜூனியர் பாலையா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். 1975-ம் ஆண்டு வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமானார்.
இவர் ‘கரகாட்டக்காரன்’, ‘கோபுர வாசலிலே’, ‘தனி ஒருவன்’, ‘புலி’, ‘சுந்தரகாண்டம்’, ‘சாட்டை’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
ஜூனியர் பாலையா சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்தார். இன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் காலமானார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.