மீண்டும் மீண்டும் மின் அமைப்பில் இடையூறு; செர்டாங் இதய அறுவைச் சிகிச்சை பிரிவு ஜூலை 22 முதல் தற்காலிகமாக மூடப்பட்டது

கோலாலம்பூர் :

செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா (HSIS) மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது என்று, சிலாங்கூர் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் உம்னி கல்டோம் ஷம்சுடின் தெரிவித்தார்.

மீண்டும் மீண்டும் மின் அமைப்பில் ஏற்பட்ட இடையூறுகளால் இந்த தற்காலிக மூடல் ஏற்பட்டுள்ளதாக அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“குறித்த ஒப்பந்ததாரர் பொதுப்பணித் துறையால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறார், மேலும் இடையூறுகளுக்கான மூல காரணத்தை அடையாளம் காண ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் என்றும், இது HSIS இன் இதய மையத்தில் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யவும் அவர் ஆக்கப்பூர்வமான மேம்பாடுகளைச் செய்து வருகிறார்” என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

HSIS இதய மையத்தில் அறுவை சிகிச்சை பிரிவு மூடப்படுவது குறித்து உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து மாநில சுகாதாரத் துறை இந்த விஷயத்தை ஒப்புக்கொண்டதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here