ஜப்பான் நிச்சயமாக திரையரங்குகளை அதிர வைப்பான்.

சிறந்த கதையுள்ள திரைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை வெற்றிப்படமாக்கும் ஆற்றலுள்ளவர் நடிகர் கார்த்தி. அவருடைய சமீப திரைப்படங்கள் அதற்கான ஆதாரமாகும். அவ்வகையில் நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் தீபாவளியன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள ஜப்பான் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்ட சில மணி நேரத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. மேலும் உலகெங்கும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக ஜப்பான் இணையதளங்களில் பலமான விமர்சனங்களை அள்ளுகின்றது.

வரும் நவம்பர் 10ஆம் தேதி உலகெங்கும் வெளியிடப்படவிருக்கும் ஜப்பான்  திரைப்படத்தை சாரதா சிவலிங்கம் கலை இயக்குநர்களின் நிறுவனங்களான மலேசியாவின் MSK Cinemas Sdn Bhd  நிறுவனமும் இந்தியாவின் MSK Film Production PVT. LTD நிறுவனமும் இணைந்து வெளியிடுகின்றன.

MSK-இன் திரைப்படத் தேர்வுகள் அனைத்தும் மலேசிய ஜப்பான் நிச்சயமாக திரையரங்குகளை அதிர வைப்பான் ரசிகர்களின் விருப்பத்தையும் பொழுதுபோக்கையும் சார்ந்திருப்பதால் இத்திரைப்படமும் மிகப்பெரும் ஆதரவைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. வெற்றியும் பெறும். அண்மையில் தொடங்கப்பட்ட இந்தியாவின் MSK Film Production PVT. LTD சிறந்த கதைகளைக் கொண்ட படங்களைத் தேர்வு செய்வதில் முனைப்புக் காட்டி வருகிறது.

இதில் கதாநாயகியாக துப்பறிவாளன், நம்மவீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மேலும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திருச்சியில் நடந்த உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது.

இப்படம் நிச்சயம் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு நல்ல ஒரு தீபாவளிப் பரிசாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங்களுமே கார்த்திக்கு பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன.

இதையடுத்து இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அவருக்கு மேலும் கைகொடுத்தது. இதனால் ஜப்பான் படமும் மாபெரும் வெற்றியைக் குவிக்கும் என்பது ரசிகர்கள் மேலும் திரைப்படக் குழுவினரின் கணிப்பாக இருக்கிறது. க்ரைம் த்ரில்லர் கலந்த ஜானரில் உருவாகியுள்ள

இப்படம் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும் எனவும் இதனால் ஜப்பான் படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமாகியுள்ளது எனவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here