Pavilion-இல் தீபாவளி கொண்டாட்ட உணர்வை மேலோங்கச் செய்யும் அம்சங்கள்.

கோலாலம்பூர் பெவிலியன், புக்கிட் ஜாலில் பெவிலியன், யுஎஸ்ஜே டா மென், இண்டர்மார்க் மால் ஆகிய பேரங்காடிகளில் சிறப்பு விற்பனை, தளத்தை அலங்கரிக்கும் வண்ணக்கோலங்கள், உயர்தரமிக்க அலங்காரம் ஆகியவற்றுடன் தீபாவளிப் பண்டிகை உணர்வை இன்னும் மேலோங்கச் செய்ய Pavilion REIT Malls அழைக்கின்றது.

மலேசியாவின் முதன்மைப் பேரங்காடிகளுள் ஒன்றான கோலாலம்பூர் பெவிலியன் தரப்பு Love and Light Deepavali எனும் சிறப்புக் கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தீபாவளி தினமான நவம்பர் 12ஆம் தேதி வரையில் இந்தக் கொண்டாட்டம் இடம்பெற்றிருக்கும்.

இந்தப் பேரங்காடியின் பிரசித்திபெற்ற கிறிஸ்டல் செயற்கை நீர்ஊற்றுக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் வண்ணக் கோலங்கள், பிரகாசமிக்க விளக்குகள் அமையப் பெற்றுள்ளன. மேலும் தீபாவளி உணர்வை நேரடியாக அனுபவிக்கும் வண்ணம் பூக்களின் அலங்காரமும் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தீபாவளிக்கு மக்கள் இந்து கலாச்சாரத்துடன் தங்களை இணைத்துக் கொள்வதற்கும் ஏற்ற வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. அக்டோபர் 21ஆம் தேதியன்று அங்கு பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்ற நிலையில் இன்று நவம்பர் 4ஆம் தேதி கிறிஸ்டல் செயற்கை நீர் ஊற்று அருகே பாரம்பரிய இசைப் படைப்புகளும் இடம்பெறுகின்றன.

மேலும் இந்தப் பேரங்காடியின் 5ஆவது மாடியில் யேஷான் சேலை கண்காட்சியும் நடத்தப்படுகின்றது. யேஷான் சாரிஸ் தரப்பினரால் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட 30 வகையான சேலைகள் இங்கு விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இன்னும் பல அம்சங்கள் நிறைந்திருக்கும் இந்தக் கொண்டாட்டத்தில் மக்கள் தவறாது கலந்து கொண்டு தீபாவளி கொண்டாட்டத்தை அனுபவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here