தெளிவான, சீரான கொள்கைகள் முதலீடுகளை கவர்வதற்கான மிக முக்கிய காரணிகள் -ஃபாமி

அரசியல் நிலைத்தன்மையுடன் கூடய தெளிவான, சீரான அரசாங்க கொள்கைகள் மலேசியாவிற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் முக்கிய காரணிகளில் அடங்கும் என்று தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில் கூறினார்.

ஜெனிவாவில் கடந்த ஜுலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மலேசிய வம்சாவளியினருடன் நடைபெற்ற ஒரு சந்திப்பில் பேசிய ஃபாஹ்மி, மடானி பொருளாதாரக் கட்டமைப்பு, 12ஆவது மலேசியத் திட்டம், புதிய தொழிற்துறை பெருந்திட்டம் 2030 (NIMP 2030) மேலும் தேசிய எரிசக்தி உருமாற்ற ரோட்மேப் (NETR) ஆகியவற்றை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

“இந்தக் கொள்கைகள் முதலீட்டாளர்களுக்கு தெளிவையும் உறுதியையும் உத்வேகத்தையும் தரக்கூடிய சிறந்த உதாரணங்கள் ஆகும்.

இதுபோன்ற கொள்கைகள் முதலீட்டாளர்களுக்கு ஓர் ஈர்ப்பையும் வாக்குறுதியையும் தரும் அதேவேளையில் தன்னிச்சையாக மாற்றப்படமாட்டாது என அவர்கள் நம்புகிறார்கள் என்று அவர் கூறினார்.

மலேசியா தொடர்ந்து வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான விருப்பமான இடமாக உள்ளது என்பதற்கு மலேசிய புள்ளியியல் இலாகா (DOSM), முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சகம் (MITI) ஆகியவற்றின் சமீபத்திய தரவுகளை அவர் ஆதாரமாக மேற்கோள் காட்டினார்.

உண்மையில், மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (MIDA) தகவல் படி, உலகளாவிய பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகள் RM89.8 பில்லியனாக இருந்தன. இது ஆண்டுக்கு ஆண்டு 3.7% அதிகரிப்பாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஜெனீவாவில் உள்ள ருமா மலேசியாவில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், ஐக்கிய நாடுகளுக்கான மலேசிய நிரந்தர தூதரகத்தின் பணியாளர்கள் உட்பட சுமார் 50 மலேசியர்கள் கலந்து கொண்டனர். ஜெனீவா, ஐ.நா.-வில் மலேசியாவின் நிரந்தரப் பிரதிநிதி டத்தோ நட்ஸிரா உஸ்மானும் உடனிருந்தார்.

     நிகழ்ச்சியின் போது, மலேசியாவின் தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் ஃபாஹ்மி பகிர்ந்து கொண்டார்.

“உலகில் மலிவான இணையத்தைக் கொண்ட முதல் 10 நாடுகளில் மலேசியாவும் ஒன்று, மேலும் தென் கொரியாவிற்குப் பிறகு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இரண்டாவது அதிவேக இணைய வேகத்தை நாங்கள் கொண்டுள்ளோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், டத்தோ நட்ஸிரா இந்த சந்திப்பை வரவேற்றார். இது ஜெனீவாவில் உள்ள மலேசியர்களுக்கு அமைச்சருடன் நேரடியாக உரையாடவும், தாயகத்திலிருந்து ஆகக் கடைசியான தகவல்களையும் நடப்பு மேம்பாடுகளையும் தெளிவாக தெரிந்துகொள்வதற்கு சிறந்த வாய்ப்பை அளித்தது என்றார் அவர்.

“இந்த நிகழ்ச்சி ஜெனீவாவில் வசிக்கும் மலேசியர்கள் அமைச்சருடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், தாயகத்தில் உள்ள தற்போதைய முன்னேற்றங்கள் குறித்த முதல்நிலை தகவல்களைப் பெறவும் அனுமதித்தது என்று டத்தோ நட்ஸிரா சொன்னார்.

ஜெனீவா மலேசிய சங்கத்தின் தலைவர் ஷகிரா ரம்லி கூறுகையில், மலேசியா சுவிட்சர்லாந்தின் வலிமையை கற்றுக்கொள்வதன் மூலம் மேம்படுத்தக்கூடிய பகுதிகள் உட்பட பல்வேறு தலைப்புகள் விவாதிக்கப்பட்டன என்று குறிப்பிட்டார். “சுவிட்சர்லாந்து நிர்வாகத்திலும், நிதி, கல்வி அல்லது உள்கட்டமைப்பு ஆகியவற்றிலும் மிகவும் வலிமையாகவும் ஆர்வமாகவும் உள்ளது,” என்று அவர் கூறினார்.

அனைத்துலக வான் போக்குவரத்து சங்கத்தின் (IATA) வணிகம், எரிபொருள் பிரிவின் தலைவர் மெல்வின் டானை பொறுத்த வரை இந்த சந்திப்பு மலேசிய வம்சாவளியினர் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், தங்கள் பார்வையை வெளிப்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கியது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். “ஃபாஹ்மி மிகவும் திறந்த மனதுடன் அன்பாகவும் அரவணைக்கக் கூடியவராகவும் சிறந்தவராகவும் இருந்தது தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் தெரிவிப்பதற்கு மிகுந்த செளகரியத்தை தந்தது என்று கருதுவதாக ஷக்கிரா சொன்னார்.

மேலும் டத்தோ ஃபாமி மலேசியாவின் வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும்போது எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள மிகவும் வசதியாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs) இணைந்து நிலையான தேசிய தகவல் தொடர்பு, தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் மடானி அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஜூலை 7 முதல் 11 வரை இங்கு நடைபெற்ற தகவல் சமூகத்தின் உலக உச்சிநிலை மாநாடு+20 உயர்-நிலை நிகழ்ச்சிக்கு (WSIS+20) மலேசியப் பேராளர்கள் குழுவுக்கு டத்தோ ஃபாஹ்மி தலைமை ஏற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here