சிறப்புக் கழிவுகளைப் பெறுவதற்கு GUINNESS மலேசியா நிறுவனத்தின் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு.

அனைத்துலக ஸ்டவுட் தினம் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் முதல் வியாழக்கிழமைகளில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். அதிலும் இவ்வாண்டு மலேசியாவின் புகழ்பெற்ற GUINNESS நிறுவனம் அதன் விசுவாசமிக்க ரசிகர்களுடன் கொண்டாட முனைகின்றது. எனவே இதன் அடிப்படையில் பல வகையான சிறப்பு குறியீட்டின் வாயிலாக Drinkies கழிவு வழங்க இந்நிறுவனம் முனைந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் @guinnessmy என்ற இன்ஸ்டாகிராம் பக்க பெயரை டேக் செய்து தங்கள் பதிவுகளைப் பதிவிட வேண்டும். அதில் முதல் 100 பதிவு பகிர்வுகள் வாயிலாக 300 பேருக்கு 10 ரிங்கிட் மதிப்பிலான பற்றுச்சீட்டு வழங்கப்படும். 200 பகிர்வுகளுக்கு வாயிலாக 200 பேருக்கு 20 ரிங்கிட் மதிப்பிலான பற்றுச் சீட்டுகளும் வழங்கப்படும்.

அதே சமயம் பதிவுகள் எண்ணிக்கை 1,000ஐக் கடந்தவுடன் 100 ரிங்கிட் மதிப்பிலான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். அதன் வாயிலாக அவர்கள் GUINNESS தயாரிப்புகளில் தங்களுக்குப் பிடித்த பானங்களை வாங்கிப் பருகலாம். இதற்கான குறியீடு கின்னஸ் மலேசியாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் பகிரப்படும்.

இந்நிலையில் வாடிக்கையாளர்கள் ஒன்றிணைந்து இந்த சிறப்புக் கழிவுகளுக்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டாடி மகிழ்வர் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என GUINNESS MALAYSIA மலேசியாவின் மார்க்கெட்டிங் பிரிவு நிர்வாகி ஷோன் லிம் தெரிவித்தார். இந்நிலையில் இந்த GUINNESS, அது சம்பந்தப்பட்ட அனைத்து விளம்பரங்களும் நடவடிக்கைகளும் 21வயதுக்கு மேற்பட்டவர்கள், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த GUINNESS தரப்பின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிரப்படும் தகவல்களைக் கண்டறிந்து வாடிக்கையாளர்கள் பதிவேற்றங்களைப் பகிர வேண்டும் என HEINEKEN Malaysia குழுமத்தின் டிஜிட்டல், தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் ஜெனினா கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here