அலோர்ஸ்டார், நவம்பர் 5 :
கெடா மாநிலத்தில் நேற்று பல பகுதிகளில் வெள்ள நீர் உயர்ந்ததைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்படடவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி, 266 குடும்பங்களைச் சேர்ந்த 954 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 8 மணியிலிருந்து பாதிக்கப்படடவர்களது எண்ணிக்கை வேறுபட்டது, இது மாநிலத்தில் நான்கு மாவட்டங்களில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (PPS) தஞ்சமடைந்த 263 குடும்பங்களைச் சேர்ந்த 933 பேராக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்படடவர்களின் காரணமாக பேலிங் மாவட்டத்தில் மற்றொரு PPS திறக்கப்பட்டது, இது இன்று காலை 5.45 மணிக்கு திறக்கப்பட்ட PPS செகோலா கெபாங்சான் (SK) தெம்பாக் ஏயில் மொத்தம் 10 பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று கெடா சிவில் தற்காப்புப் படை (APM) பேரிடர் மேலாண்மைக் குழு செயலகப் பிரிவுத் தலைவர், மேஜர் (PA) முகமட் முவாஸ் முகமட் யூசோஃப் தெரிவித்தார்.
இது ஐந்து மாவட்டங்களில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களின் (PPS ) எண்ணிக்கையை 13 ஆக உயர்த்துகிறது, அதாவது கோத்தாஸ்டாரில் ஏழு PPS, குபாங் பாசு மற்றும் பென்டாங்கில் தலா இரண்டு PPS, பொக்கோக்சேனா மற்றும் பாலிங்கில் ஒரு PPS வீதம் செயற்பாட்டிலுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .





















