வாஷிங்டன்:
தமிழர்களின் பாரம்பரியம் காக்கும் பல பண்டிகைகள் இன்று உலகமெங்கும் பல நாடு களில் கொண்டாடப்படுகின்றது. ஆங்காங்கே சிதறிக் கிடைக்கும் தமிழர்கள் கொண் டாடும் பண்டிகைகள் மற்ற இனத்தவர்களையும் ஈர்த்துக்கொள்வதுடன் அவர்களை கொண்டாடவும் வைக்கிறது.
அவ்வகையில் அமெரிக்க அதிபர் ஜோபிடன், அவரது மனைவி ஜில் குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி வாழ்த்து கூறியுள்ளனர். அறிவு, அன்பு, ஒற்றுமையின் வெளிப்பாடாக நானும், மனைவியும் குத்துவிளக்கு ஏற்றினோம் என்று ஜோபிடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு குறித்து உலகெங்கும் பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக் கொண் டிருக்கின்றன. மேலும் தழிழர்களைப் பெருமைப்படவைத்த அமெரிக்க அதிபருக்கு பலரும் நன்றி தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் அவரைப் போற்றும் பல விமர் சனங்கள் குவிந்தன.
இன , மத, பேதமின்றி தீபாவளித் தினத்தில் அமெரிக்க அதிபர் செய்த இந்த அற்புத மான செயலானது உலகத் தமிழர்களை மகிழ்விக்கிறது, கௌரவப்படுத்துகிறது, குறிப்பாக அமெரிக்கவாழ் தமிழர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்துகின்றது என விமர்சனங்கள் வெளிவந்தன.




















