திருமணத்தை மீறிய உறவு.. நெல்லையில் இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை

நெல்லை:

நெல்லை டவுனில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்த இளைஞரை 3 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த கொலை தொடர்பாக அவரது கள்ளக்காதலியின் கணவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்த 35 வயதாகும் முகம்மது அசாருதீன் என்பவர் நெல்லை யில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவில் செவ்வாய்கிழமை இன்று நின்று கொண்டிருந்த முகம்மது அசாருதீனை 3 பேர் கும்பல் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடியது.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பேட்டை போலீசார் அசாருதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்று விசாரித்த போது, கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது தெரியவந்தது.போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நெல்லையில் சூப்பர் மார்க்கெட் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்செய்து முகம்மது அசாருதீனுக்கும் , அவரது சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த மகாராஜன் என்பவரது மனைவி பகவதிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனை மகாராஜன் கண்டித்ததால், பகவதி வீட்டை விட்டு வெளியேறி அசாருதீன் ஏற்பாட்டில் பேட்டை வி.வி.கே. தெருவில் உள்ள வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

தன் மனைவியை அபகரித்த முகம்மது அசாருதீனை கொலை செய்ய வேண்டும் என்று பகவதியின் கணவரான டிரைவர் மகாராஜன் திட்டம் தீட்டினார். இதையடுத்து டவுனை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் செல்வம், மற்றொரு நண்பருடன் சேர்ந்து மகாராஜன் நேற்று இரவு வி.வி.கே. தெருவிற்கு சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் பகவதியிடம் முகம்மது அசாருதீன் பேசிக்கொண்டிருந்த நிலையில், தன் மனைவி கண் முன்னாலேயே மகாராஜன் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து அசாருதீனை சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார் என்பது தெரியவந்தது.  மேலும் மகாராஜனுடன் சேர்ந்து கொலையில் ஈடுபட்ட செல்வத்திற்கும், முகம்மது அசாருதீன் மீது பகை இருந்துள்ளது.

செல்வத்தின் வீட்டுப்பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.60 லட்சம் வாங்கி தருவதாக அசாருதீன் ஏமாற்றி உள்ளார். மேலும் செல்வத்தின் ஆதார் கார்டு மூலமாக குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் அசாருதீன் பணம் பெற்றும் மோசடி செய்தார். அந்த விவகாரத்தில் செல்வம் சமீ பத்தில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். இதனால் தான் மகாராஜன் மற்றும் செல் வம் இணைந்து நண்பர்களுடன் அசாருதீனை கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான மகாராஜனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக நெல்லை டவுன் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (39), பாளை சிவந்திபட்டி நடுத்தெருவை சேர்ந்த மூர்த்தி என்ற கார்த்திகேயன் (24), பாளை வீரமாணிக்க புரத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி (25), சபரி மணி (23) ஆகிய 4 பேர் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here