பாசார் போரோங்கில் PERKESO –KWSP முகப்பிடங்கள் அமைக்கப்படும்

பாசார் போரோங்கில் வியாபாரம் செய்யும் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு பாசார் போரோங்கில் SOCSO , EPF முகப்பிடங்கள் அமைக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நேற்று அறிவித்தார்.

பாசார் போரோங்கில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முறையாக SOCSO மற்றும் EPF செலுத்தப்படுவதை உறுதி செய்ய இந்த முகப்பிடங்கள் அவசியமாகும்.

பாசார் போரோங்கில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு SOCSO சமூக நல பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

அதேசமயம் அவர்களுக்கு முறையாக EPF செலுத்தப்பட வேண்டும்.

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மனித வள துறை மேற்கொண்ட விசாரணையில் பாசார் போரோங்கில் சில முதலாளிகள் தங்களது தொழிலாளர்களுக்கு SOCSO மற்றும் EPF செலுத்தப்படாதது தெரிய வந்துள்ளது.

இது சட்டப்படி குற்றமாகும். ஆகவே முதலாளிகள் அனைவரும் தங்களது தொழிலாளர்களுக்கு SOCSO மற்றும் EPF செலுத்தும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

செலாயாங் பசார் போரோங்கில் 5,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

இவர்களின் வசதிக்காக SOCSO மற்றும் EPF முகப்பிடங்கள் முறையாக அமைக்கப்படும். இதன் வழி முதலாளிகள் இலகுவாக தங்களது தொழிலாளர்களுக்கு SOCSO மற்றும் EPF பணத்தை செலுத்தி விடலாம் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here