பேராக், கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 356 ஆக குறைந்துள்ளது

கோலாலம்பூர்:

கெடா மற்றும் பேராக்கில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 356 ஆக குறைந்துள்ளது.

கெடாவில் காலை 8 மணி நிலவரப்படி, நான்கு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் 81 குடும்பங்களைச் சேர்ந்த 249 பேர் தங்கியுள்ளனர், இந்த எண்ணிக்கை நேற்று இரவு (நவம்பர் 16) 83 குடும்பங்களைச் சேர்ந்த 253 பேராக இருந்தது என்று, கெடா குடிமைத் தற்காப்புப் படை (APM) பேரிடர் மேலாண்மை செயலகப் பிரிவுத் தலைவர், மேஜர் (PA) முஹமட் சுஹைமி முகமட் ஜைன் கூறினார்.

இந்த நிவாரண மையங்களில் மூன்று PPS கோத்தா ஸ்டார் மாவட்டத்திலும் ஒன்று குபாங் பாசு மாவட்டத்திலும் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில் பேராக்கிலுள்ள நான்கு பிபிஎஸ்ஸில், நேற்றிரவு 33 குடும்பங்களைச் சேர்ந்த 114 பேர் தங்கியிருந்த நிலையில், இன்று காலை 31 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேராகக் குறைந்துள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here