கொழும்பு:
அண்மையில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையின் முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி.அகிலத்திருநாயகி அம்மா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
வயது என்பது ஒரு நம்பர்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவுபடுத்துவதாய் அமைந்துள்ளது அவரது சாதனை.
இவர் குறித்த National Masters & Seniors Athletics போட்டியில் 1500m ஓட்டம் மற்றும் 5000m விரைவு நடை ஆகியவற்றில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேலும் 800m ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.