உரிமமின்றி பாதுகாக்கப்பட்ட பறவைகளை வைத்திருந்த ஆடவருக்கு 40,000 ரிங்கிட் அபராதம்

சிரம்பான்:

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், உரிமம் இல்லாமல் பாதுகாக்கப்பட்ட பறவைகளை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பெட்டிக் கடை உரிமையாளருக்கு அமர்வு நீதிமன்றம் இன்று RM40,000 அபராதம் விதித்து, தீர்ப்பளித்தது.

11 இந்திய வெள்ளைக் கண் பறவைகளை (Zosterops palpebrosus) இங்குள்ள ஜாலான் கபிடன் டாம் யோங்கில் உள்ள வணிக வளாகத்தில் வைத்திருந்ததாக் முதல் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட தான் சீ காங், 38, குறித்த குற்றத்தை நவம்பர் 3, 2016 அன்று புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக ரிம10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் இரண்டு நீல கிரீடம் அணிந்த தொங்கும் கிளிகளை (Loriculus galgulus) அதே நேரம் மற்றும் தேதியில் அதே வளாகத்தில் வைத்திருந்ததற்காக இரண்டாவது குற்றச்சாட்டின் பேரில்,RM30,000 அபராதம் விதித்தது. அதனை செலுத்த தவறினால் 6 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 2010ன் கீழ் இந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here