மலாக்காவிலுள்ள ஒரு நிறுவனத்தின் காபி சேமிப்பு கிடங்கு தீயில் எரிந்து நாசம்

மலாக்கா:

நேற்று (நவம்பர் 26) இரவு தாமான் டெக்னாலஜி செங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ளூர் காபி நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு எரிந்து நாசமானது.

சம்பவம் தொடர்பில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நேற்றிரவு 9.59 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் மூத்த தீயணைப்புத் துறைத் தலைவர் II, முகமட் கைருல் நிஜாம் முகமட் அனுவார் தெரிவித்தார்.

“சம்பவ இடத்திற்கு வந்ததும், 120m x 60m பரப்பளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, தீயில் கிட்டத்தட்ட 90% எரிந்து நாசமானது என்றும், இன்று திங்கட்கிழமை (நவம்பர் 27) காலை 8.40 மணி நிலவரப்படி, தீயை அணைக்கும் பணி இன்னும் தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.

நேற்றிரவு 11.05 மணிக்கு தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டாலும், அங்கு குறைந்த நீரின் அழுத்தம் காரணமாக இது கடினமாக உள்ளது,” என்று அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த சம்பவத்தில் யாரும் பாதிக்கப்பட்டவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் மற்றும் மொத்த இழப்பு இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here