நவ.29ஆம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு

கிளந்தான், தெரெங்கானு மற்றும் பகாங்கில் பல பகுதிகளில் திங்கள் (நவம்பர் 27) முதல் புதன்கிழமை (நவம்பர் 29) வரை தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கிளந்தான் தும்பாட், பாசீர் மாஸ், கோத்த பாரு, தனா மேரா, பச்சோக், மச்சாங் மற்றும் பாசீர் பூத்தே ஆகிய இடங்களுக்கு எச்சரிக்கை நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதேபோன்ற எச்சரிக்கை தெரெங்கானுவில் உள்ள பெசூட், செத்தியூ, கோல நெரஸ், கோல தெரெங்கானு, மாராங், டுங்குன் மற்றும் கெமாமன் ஆகிய இடங்களுக்கும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் பகாங்கில் குவாந்தன் மற்றும் பெக்கான் ஆகியவை அடங்கும்.

பொதுமக்கள் எப்போதும் https://www.met.gov.my என்ற இணையதளத்தையும் அதன் சமூக ஊடக கணக்குகளையும் பார்க்க வேண்டும் என்றும், சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு myCuaca அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. பொதுமக்கள் மெட்மலேசியா ஹாட்லைனை 1-300-22-1638 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here